ரஷ்யாவில் முதலில் நிலநடுக்கம் இப்போது எரிமலை வெடிப்பு

31 ஆடி 2025 வியாழன் 16:19 | பார்வைகள் : 1305
ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரு அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் ரஷ்யாவில் மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதன்கிழமை காலை முதலில் ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிக வலிமையான இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமியும் ஏற்பட்டது.
அடுத்த அதிர்ச்சியாக ரஷ்யாவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியிருக்கிறது. யூரேசியாவின் மிக உயரமான ஆக்டிவ் எரிமலையான க்ளூச்செவ்ஸ்காய் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இந்த எரிமலை இப்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த எரிமலை பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கியிலிருந்து வடக்கே சுமார் 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.