9 குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை: பள்ளி உதவியாளர் கைது!!

31 ஆடி 2025 வியாழன் 15:44 | பார்வைகள் : 1679
கெறால்ட் (l'Hérault)
மாவட்டத்தின் விக்-லா-கார்டியோலில் (Vic-La-Gardiole) உள்ள குழந்தை பராமரிப்பு பள்ளியில் பணியாற்றிய 59 வயதுடைய பெண் ஒருவர், 3 முதல் 4 வயதுடைய ஒன்பது குழந்தைகள் மீது கை விரலால் புகுத்தல் மற்றும் பிற பாலியல் வன்கொடுமைகள் செய்ததாகக் கூறப்படுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேயரும் அதிகாரிகளும் இதில் தலையீடு செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் குற்றவாளியைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜூலை 3ஆம் திகதி முதல் தற்காலிக நிர்வாகத் தடையால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 2024 அக்டோபர் முதல் ATSEM (பள்ளி உதவியாளர்) பணியாளராகக் குழந்தைகளுடன் நேரடியாக பணியாற்றி வந்தார். தற்போது, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உளவியல் உதவிக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை தொடங்கும் போது இது மேலும் விரிவாக்கப்படும். விசாரணை தொடர்கிறது, மேலும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.