பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! - பிரான்சுடன் கைகோர்த்த 14 நாடுகள்!

31 ஆடி 2025 வியாழன் 12:49 | பார்வைகள் : 2266
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதை பிரான்ஸ் முதன்முறையாக அறிவித்தது. அதை அடுத்து மேலும் 14 நாடுகள் பிரான்சுடன் இணைந்துள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் செப்டம்பரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஐ.நா மாநாட்டில் வைத்து இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Andorra, Australia, Canada, Finland, France, Iceland, Ireland, Luxembourg, Malta, New Zealand, Norway, Portugal, San Marino, Slovenia மற்றும் Spain ஆகிய நாடுகளும் பிரான்சுடன் கை கோர்த்துள்ளன.
பிரித்தானியா சில நிபந்தனைகளை விடுத்துள்ளது. பிரான்சின் இந்த முடிவை அமெரிக்கா முழுமையாக எதிர்த்துள்ளது.