Paristamil Navigation Paristamil advert login

40°C வெப்பம்!

40°C வெப்பம்!

31 ஆடி 2025 வியாழன் 06:30 | பார்வைகள் : 2467


 

பிரான்சில் அடுத்த வாரம் முழுவதும் மிக கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எதிர்வுகூறியுள்ளது.

தலைநகர் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இந்த வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 40°C வரை வெப்பம் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் 4 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் வெப்பம்  செவ்வாய், புதன்கிழமைகளின் உச்சமடைந்து, வெள்ளிக்கிழமை வரை நிலவி, பின்னர் வார இறுதி நாட்களில் படிப்படியாக குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

தலைநகரில் 28°C முதல், 34°C வரை வெப்பம் நில வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்துகலில் இருந்து பிரான்சை இந்த வெப்ப அலை தாக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்