பதப்படுத்தப்பட்ட கேரட் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கால் உயிரிழந்த மூதாட்டி!!

30 ஆடி 2025 புதன் 22:14 | பார்வைகள் : 2093
மேன்-எ-லொய்ர் (Maine-et-Loire ) பகுதியில் 78 வயதான ஒரு பெண், வீட்டில் தயாரித்த கேரட் கேக் சாப்பிட்டதன் பின்னர் போட்டுலிசம் (Botulisme) தொற்றால் ஜூலை 29 திகதி இரவில் உயிரிழந்துள்ளார்.
இவரும் ஐந்து நண்பர்களும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் வீட்டில் செய்த பதப்படுத்தப் கேரட் கேக்கை உண்டிருந்தனர். ஆறு பேரில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் மருத்துவமனையில் உள்ளார், மற்ற நால்வரும் குணமடைந்து வருகிறார்கள். உயிரிழந்த நபரே கேக்கை தயாரித்தவர்; ஒரு பேக்கில் மட்டும் தொற்று இருந்தது என சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போட்டுலிசம் (Botulisme) என்பது Clostridium botulinum எனும் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவை உண்டதால் ஏற்படும் அபாயகரமான நோயாகும். இது வாந்தி, வயிற்றுவலி, வாய் உலர்வு, பார்வை மங்கல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே பதபடுத்தப்பட்ட உணவுகளில் சந்தேகம் இருந்தால், அதை உடனே குப்பையில் போடுதல் மற்றும் உண்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025