பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர்
31 ஆடி 2025 வியாழன் 10:03 | பார்வைகள் : 863
பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
ராஜ்யசபாவில், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, ஜெய்சங்கர் பேசியதாவது: பாஜவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் சம்பவங்கள் நடந்தன. பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வந்த பிரதமர் மோடிக்கு நன்றி.
பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் பல வழிகளில் மிகவும் தனித்துவமான ஒப்பந்தம். ஒரு நாடு தனது முக்கிய நதிகளை அடுத்த நாட்டிற்கு பாய அனுமதித்த எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் நினைத்துப் பார்க்க முடியாது.
நேருவின் தவறுகள்!
எனவே இது ஒரு அசாதாரண ஒப்பந்தம். அதை நாம் நிறுத்தி வைக்கும்போது, இந்த நிகழ்வின் வரலாற்றை நினைவு கூர்வது முக்கியம். நேற்று நான் கேள்விப்பட்டேன், சிலர் வரலாற்று விஷயங்களை மறந்து விட விரும்பு கிறார்கள்.
ஒருவேளை அது அவர்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம், சில விஷயங்களை மட்டுமே நினைவு கூர்கிறார்கள். காங்கிரஸ் பயங்கரவாதத்தை இயல்பாக்கியது. பாகிஸ்தானை பாதிக்கப்பட்டவராக சித்தரித்தது. நேருவின் தவறுகளை சரிசெய்ய முடியாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது, ஆனால் பிரதமர் மோடி அதை சரி செய்தார்.
எவ்வளவு காலம்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதப் பிரச்சினையை உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் உறுதியாக வைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் தொடங்கியபோது, நிலைமை எவ்வளவு தீவிரமானது.
எவ்வளவு காலம் தொடரக்கூடும் என்பதை மதிப்பிடுவதற்காக பல நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டன. நாங்கள் அனைவருக்கும் ஒரே செய்தியை தெரிவித்தோம். நாங்கள் எந்த மத்தியஸ்தத்திற்கும் தயாராக இல்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு விஷயமும் இருதரப்பு ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


























Bons Plans
Annuaire
Scan