Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பெய்து வரும் கனமழை - 34 பேர் பலி

சீனாவில் பெய்து வரும் கனமழை - 34 பேர் பலி

30 ஆடி 2025 புதன் 19:18 | பார்வைகள் : 285


சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடுமையான மற்றும் இடைவிடாத கனமழை தொடர்ந்தபடியே கொட்டிவருகிற நிலையில் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கமும் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை சுமார் 34 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,

மியுன் மற்றும் யாங்கிங் ஆகிய மாகாணங்கள் இந்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகள், வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 பேர் வரை மக்கள் பீஜிங்கிற்கு பாதுகாப்புக்காக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 17,000 பேர் மியுன் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

மியுன் மாகாணத்தில் அணைகள் நிரம்பி நீர்மட்டம் அபாய எல்லையை எட்டியதால், அவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழையால் ஏனெனில் மழை தொடர்ந்தும் பெய்துக் கொண்டிருக்கிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்