சுனாமி எச்சரிக்கை! - ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை!

30 ஆடி 2025 புதன் 18:16 | பார்வைகள் : 2544
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள சுனாமி காரணமாக பிரான்சின் போலினேசியா தீவு (Polynésie française) மக்களுக்கு ஜனாதிபதி மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை உடனடியாக பின்பற்றும்படியும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மக்ரோன் அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு Polynésie தீவு மக்களோடு தாம் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவு நிலநடுக்கமாக 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ரஷ்யாவின் Kamchatka பெனிசுலாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.
ஐந்து மீற்றர் வரை உயரத்தில் கடலலை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, Kamchatka பெனிசுலாவில் எரிமலை வெடித்துள்ளதாவும், பல மில்லியன் மக்கள் சீனா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.