16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் YouTube பார்க்க தடை

30 ஆடி 2025 புதன் 18:18 | பார்வைகள் : 2074
உலக அளவில் சமூக வலைதளப் பயன்பாடுகளின் சேவை அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சிறுவர்களும் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது, அவர்களுடைய படிப்பு மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துதாக பெற்றோர் தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
இதனால் சிறார்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் பெருகத் தொடங்கி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இந்த நிலையில்தான், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பானீஸ் கூறியிருந்தார்.
முன்னதாக இதுதொடர்பாக, அவர் எட்டு மாகாணங்களின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அத்தகைய சட்டத்தை அமல்படுத்துவதற்கு அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தனா்.
இதையடுத்து, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை செய்யும் வகையில் இணைய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (நவ.27) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதுபோன்று 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் எக்ஸ், டிக்டாக், பேஸ்புக், ஸ்நாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு 150 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சிறுவா்களின் அறிவை வளா்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவா்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீா்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவா்கள் நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025