ரஷ்யாவில் அவசர நிலை பிறப்பித்த நகர அதிகாரிகள்

30 ஆடி 2025 புதன் 17:18 | பார்வைகள் : 1772
ரஷ்யாவிலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தை 30-07-2025 காலை பயங்கர நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவானது.
நிலநடுக்கத்தைப் பொருத்தவரை ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானாலே அது பயங்கர நிலநடுக்கம் ஆகும்.
அப்படியானால், ரஷ்யாவைத் தாக்கிய நிலநடுக்கம் பயங்கரமானது. ஆனாலும், அங்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, உயிர்ச்சேதம் ஏதேனும் உண்டா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நிலநடுக்கம் தாக்கிய கம்சாத்கா தீபகற்பத்தின் தலைநகரான Petropavlovsk-Kamchatskyயில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர மேயரான Yevgeny Belyaev, சேதங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவசர உதவிக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறார் பள்ளி ஒன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், ஆனாலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், சில கட்டிடங்களில் லிஃப்ட்கள் இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சம் காரணமாக வீடுகளுக்குத் திரும்ப தயங்கும் மக்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் கடற்கரைகளுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
கம்சாத்கா, சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற இடமாகும். தற்போது அங்கு 7,000 முதல் 8,000 சுற்றுலாப்பயணிகள் இருப்பதாகவும், ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும், பல சுற்றுலாத்தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025