Paristamil Navigation Paristamil advert login

கஞ்சா உட்கொண்ட 9 மாதக்குழந்தை: பெற்றோர் காவலில்!!

கஞ்சா உட்கொண்ட 9 மாதக்குழந்தை: பெற்றோர் காவலில்!!

30 ஆடி 2025 புதன் 16:16 | பார்வைகள் : 3371


யவேலின் (Mantes-la-Ville/Yvelines) மாவட்டத்தில் 9 மாதக் குழந்தை ஒருவருக்கு கஞ்சா உட்கொண்டதால் வலிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜூலை 14ஆம் திகதி, குழந்தை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா உட்கொண்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

குழந்தை உடனடியாக குழந்தைகள் நலத்துறையால் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இது நெருக்கமான தொடர்பு, புகை அல்லது தாய்ப்பால் ஊட்டலின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோர், அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியிருப்பாளர்கள். தந்தை மரபாக கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளவர்; அவரது சட்ட பையிலிருந்து கஞ்சா உருண்டை விழுந்து குழந்தை அதை நக்கியிருக்கலாம் என சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

24 மணி நேர காவலுக்குப் பிறகு, பெற்றோர் விடுவிக்கப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளணது. தந்தைக்கு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆஜராக வேண்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்