15 நாட்களில் பழுதுபார்க்கவில்லையெனில் பெரும் அபராதம்: டகாடா விவகாரம் தீவிரம்!!

29 ஆடி 2025 செவ்வாய் 20:15 | பார்வைகள் : 2841
டகாடா (Takata) எயர்பேக்குகள் கோளாறு காரணமாக, 1.7 மில்லியன் வாகனங்கள் பிரான்ஸில் பழுது பார்க்கப்பட வேண்டும்.
இந்த எயர்பேக்குகள் மிகவும் ஆபத்தானவை என அரசு அறிவித்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் பதிவு செய்த பின்பு 15 நாட்களுக்குள் வாகனத்தை சரிசெய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், கார் நிறுவனங்கள் வாரத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
வாடிக்கையாளர்கள் மாற்று வாகனம் அல்லது வீட்டிலேயே சரிசெய்வது போன்ற சலுகைகளை பெற முடியும். வாகனத்தின் VIN எண்ணைப் பயன்படுத்தி உற்பத்தியாளர் இணையதளத்தில் சோதிக்கலாம்.
இந்த பிரச்சனையால் 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். ரீம்ஸில் (Reims) நடந்த ஒரு உயிரிழப்புக்குப் பிறகு, அரசு இந்த வாகனங்களை சாலையில் இயக்குவதை தடை செய்துள்ளது.
நுகர்வோர் அமைப்பான UFC-Que Choisir, Stellantis கார் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற வழக்கைத் தொடங்கியுள்ளது. கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்க வானொலி மற்றும் விளம்பரங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்த வேண்டும் என அரசு கட்டாயமாக்கியுள்ளது.