யாழில் சகோதரியுடன் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு
29 ஆடி 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 1757
யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் , மணியம் தோட்டம் , 1ஆம் குறுக்குத் தெருவைச், சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரும் , அவரது 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan