Paristamil Navigation Paristamil advert login

அரசு இழப்பீட்டுத் திட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!!

அரசு இழப்பீட்டுத் திட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!!

29 ஆடி 2025 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 3166


2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு சுகாதாரச் செலவுகளை குறைக்கும் நோக்கில் நோய்நிலை வேலைவிடுப்புகள் (arrêts-maladies) தொடர்பான இழப்பீட்டுத் திட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. 

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2023ல் வேலைவிடுப்புகள் 30% அதிகரித்துள்ளன. இந்த உயர்வு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் 55-64 வயதுக்குட்பட்டோர் அதிகம் வேலைக்குச் செல்லும் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. 2023ல் மட்டும் இவ்விடுப்புகளுக்கான செலவு €10.2 பில்லியனாக இருந்துள்ளது.

இது தவிர, ஊதிய உயர்வு மற்றும் பணவீக்கத்துடன் இணைந்து, வேலைப்பளு, உடல்நலக்குறைவுகள் மற்றும் வேலைக்கான சூழ்நிலை மோசமாதல் போன்ற காரணிகளும் செலவு உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. 

அரசாங்கம் தவறான வேலைவிடுப்புகள் மற்றும் பயன்பாட்டிலுள்ள "அபியூஸ்கள்" குறித்தும் கவலை தெரிவித்து, இழப்பீட்டுத் திட்டங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவர விரும்புகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்