Paristamil Navigation Paristamil advert login

Temu தளத்தில் சட்டவிரோதமான பொருட்கள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் குற்றச்சாட்டு!!!

Temu தளத்தில் சட்டவிரோதமான பொருட்கள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் குற்றச்சாட்டு!!!

28 ஆடி 2025 திங்கள் 16:35 | பார்வைகள் : 1075


Temu என்ற சீன ஆன்லைன் வணிக தளத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் (EU) தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

2024 அக்டோபரில் தொடங்கிய விசாரணையின் படி, Temu தளத்தில் சட்டவிரோதமான பொருட்கள், குறிப்பாக குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் சிறிய மின்சாதனங்கள் விற்கப்படுகின்றன. இவை நுகர்வோருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், Temu தளம் ஐரோப்பியாவின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தினை (DSA) பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Temu தற்போது 93.7 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளதுடன், அதன் விலை குறைப்பு உத்திகள் மற்றும் பரந்த பொருள் வகைகள் மூலம் விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், இது 6% வருமான அபராதத்தை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். 

Temu மட்டுமன்றி, AliExpress, Facebook, Instagram, X மற்றும் TikTok போன்ற தளங்களும் ஐரோப்பிய ஆணையால் கண்காணிக்கப்படுகின்றன. சிறிய வெளிநாட்டு பார்சல்களுக்கு €2 வரி விதிப்பதற்கான புதிய ஐரோப்பிய சட்டத்திட்டமும் தற்போது பரிசீலனையில் உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்