உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் தங்கம் வென்றுள்ளது!
.jpg)
28 ஆடி 2025 திங்கள் 15:35 | பார்வைகள் : 556
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், பிரான்சை சேர்ந்த மாக்ஸிம் குரூசே (Maxime Grousset), 50 மீட்டர் பட்டாம்பூச்சி போட்டியில் 22.48 வினாடிகளில் நீந்தி உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது அவருக்கான இரண்டாவது உலக பட்டமாகும் (முந்தையது 2023-ல் 100 மீ. பட்டாம்பூச்சி). அரையிறுதியில் அவர் 22.61 வினாடிகளில் பிரான்ஸ் சாதனையை முறியடித்து, இறுதியில் அதை மேலும் மேம்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் நோயே பொந்தி மற்றும் இத்தாலியின் தோமஸ் சேக்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, முதல் தங்கம் வென்று பிரான்ஸின் பதக்க எண்ணிக்கையை திறந்துள்ளார்.
கடந்த ஆண்டின் தோல்விகளுக்குப் பிறகு இந்த வெற்றி மிக முக்கியமானது. 2023-ல் இவர் 50 மீ. பட்டாம்பூச்சியில் வெறும் வெண்கலமே பெற்றிருந்தார்; 2024 பரிஸ் ஒலிம்பிக்கிலும் எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை. இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் தலைமை வீரராக எழுந்துள்ளார்.
மாக்ஸிம் குரூசே, இன்னும் 100 மீ. பட்டாம்பூச்சி மற்றும் 50,100 மீ. நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.