பரிஸ் : வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்! - சொற்ப பணத்துக்காக தாக்குதல்!

28 ஆடி 2025 திங்கள் 12:12 | பார்வைகள் : 2663
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து 80 யூரோக்கள் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். சொற்ப பணத்துக்காக பெரும் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Airbnb இல் வீடொன்றை வாடைக்கு பெற்றுக்கொண்ட இரு பிரேஸில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே தாக்கப்பட்டுள்ளனர். 11 மணி அளவில் கதவினை தட்டிய முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கதவு திறக்கப்பட்டதும், தாக்குதல் மேற்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
இரு சுற்றுலாப்பயணிகளையும் தாக்கி, அவர்களிடம் இருந்த உடமைகளை கொள்ளையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களிடம் 80 யூரோக்கள் பணம் மட்டுமே இருந்துள்ளது. அதனைக் கொள்ளையிட்டுக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025