பிரிஜிட் மக்ரோன் குறித்து அவதூறு பரப்பியவர் மீது அமெரிக்காவில் வழக்கு!
23 ஆடி 2025 புதன் 22:09 | பார்வைகள் : 8021
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன், அமெரிக்க ஊடகவியலாளர் கான்டேஸ் ஓவன்ஸின் (Candace Owens) மீது அவதூறு வழக்கை டெலாவேர் மாநிலத்தில் ஜூலை 23 புதன்கிழமை, தொடுத்துள்ளனர்.
ஓவன்ஸ் தனது ஒலிபரப்பில், பிரிஜிட் மக்ரோன் உண்மையில் ஒரு ஆண் என்றும், ஜியான்-மிசேல் ட்ரோஞ்யே (Jean-Michel Trogneux) என்ற பெயரில் பிறந்த அவரது சகோதரர் என்றும் கூறியுள்ளார். இவரது சதி மற்றும் இழிவான தகவல்களை நிறுத்த பலமுறை கோரியதையும், ஊடகவியலாளர் தவிர்த்ததால், இறுதி வழியாக நீதிமன்ற நடவடிக்கை தேர்ந்தெடுக்கப்பட்டது என்று மக்ரோன் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய அம்சமாக “Becoming Brigitte” என்ற ஆவணப்படம் உள்ளது, இது YouTube-இல் இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்த்து முடிந்துள்ளது.
அமெரிக்க சட்டப்படி, அவதூறு வழக்கில் வெற்றி பெற, மக்ரோன் தம்பதிகள், அந்தக் கூற்றுகள் பொய்யென்பதை நிரூபிக்க வேண்டியதும் அல்லது உண்மையை அலட்சியப்படுத்தினாள் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. மக்ோன் தம்பதிகள் தீர்ப்பு மற்றும் தண்டனை இழப்பீடுகளையும் கோருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan