Paristamil Navigation Paristamil advert login

80 வருடங்களின் பின்னர்- பிறப்பு இறப்பு எண்ணிக்கையில் பாரிய மாற்றம்!!

80 வருடங்களின் பின்னர்- பிறப்பு இறப்பு எண்ணிக்கையில் பாரிய மாற்றம்!!

23 ஆடி 2025 புதன் 19:39 | பார்வைகள் : 1007


 

பிரான்சில் கடந்த 80 ஆண்டுகளில் கண்டிராத அளவு பிறப்பு இறப்பு எண்ணிக்கை மாற்றமடைந்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் பிரான்சில் 651,000 பேர் மரணமடைந்துள்ளனர். அதேகாலப்பகுதியில் 650,000 குழந்தைகள் பிறந்துள்ளன. பிரான்சில் 1945 ஆம் ஆண்டின் பின்னர் 80 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக பிறப்பின் எண்ணிக்கையை விட இறப்பின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

பிரான்சில் கடந்த பல வருடங்களாக குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்து சென்றபோதும், இத்தனை விரைவாக எண்ணிக்கை மாறுபடும் என எதிர்ப்பாக்கவில்லை என பிரெஞ்சு பொருளாதார ஆய்வகம் (Observatoire français des conjonctures économiques) இன் தலைவர் François Geerolf தெரிவித்துள்ளார். அதேவேளை, 2035 ஆம் ஆண்டுகளில் நிலமை படுமோசமாகிவிடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்