நன்மை தரும் மாதுளை
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 16937
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான சத்துகளை மாதுளை வழங்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகள் தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம் என்கிறார்கள். கர்ப்பிணிகள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிடுவதால் தாய்க்கும், சேய்க்கும் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோயாளிகளுக்கும் இது ஏற்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மாதுளம்பழம் ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. சிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்தபோது, அவர்களுக்கு சிறுநீரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளை மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது. தற்போது சந்தைக்கு மாதுளைவரத்து அதிகரித்திருக்கிறது. எனவே மாதுளம்பழம் வாங்கிச் சாப்பிட்டு, அது அளிக்கும் நன்மைகளைப் பெறலாம்!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan