இரண்டு வாரங்களுக்கு தடைப்படும் எட்டாம் இலக்க மெற்றோ!

17 ஆவணி 2025 ஞாயிறு 19:37 | பார்வைகள் : 3054
எட்டாம் இலக்க மெற்றோ இரண்டு வாரங்களுக்கு தடைப்பட உள்ளது. நாளை ஓகஸ்ட் 18 திங்கட்கிழமை முதல் ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை போக்குவரத்து தடைப்பட உள்ளது.
குறித்த நாட்களில் Concorde முதல் Reuilly-Diderot வரை எட்டாம் இலக்க மெற்றோ இயக்கப்பட மாட்டாது. குறித்த மெற்றோ சேவையில் MF19 எனும் புதியரக தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகளுக்காக இந்த கால அவகாசம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகள் சேவையில் இருந்த பழைய தொடருந்துகள் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய MF19 ரக தொடருந்துகள் சேவைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இவ்வகை தொடருந்துகள் 2029 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து 3 ஆம், 7 ஆம், 10 ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1