விளாடிமிர் புட்டின் அமைதியை விரும்பவில்லை! - மக்ரோன் குற்றச்சாட்டு!!

17 ஆவணி 2025 ஞாயிறு 18:37 | பார்வைகள் : 457
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமைதியை விரும்பவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க-ரஷ்ய அதிபர்கள் சந்தித்துக்கொண்ட உலகப்பிரசித்தி பெற்ற நிகழ்வின் பின்னர் NATO நாடுகள் ஒரிரு நாட்களில் சந்திக்க உள்ளனர். இநிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலில்லாமல், புட்டினுக்கு அமைதி மீது நம்பிக்கையும் இல்லை. அதனை அவர் விரும்பவும் இல்லை!” என சாடினார்.
“புட்டினுக்கு அமைதி தேவைப்படவில்லை. அவருக்கு யுக்ரேன் சரணடையவேண்டும் எனும் விரும்பம் உள்ளது. அதனையே கோரிக்கையாக முன்மொழிகிறார்.” என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ரஷ்யாவுடன் நாம் பணிந்து போனால், நாளை பெரும் மோதல் ஒன்றுக்கு தயாராகிறோம் என அர்த்தம் எனவும் அவர் தெரிவித்தார்.