Paristamil Navigation Paristamil advert login

வாழ்க்கையின் ஒரு பகுதி போராட்டமா ?

வாழ்க்கையின் ஒரு பகுதி போராட்டமா ?

17 ஆவணி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 135


சிறு வயதில் பொம்மைகளை நினைத்து ஏங்கி அழுவோம். ஆனால் வயது அதிகமாகி, வேலைக்குச் சென்ற பிறகு அங்குள்ள பணிச்சுமையால் மன அழுத்த்த்தை எதிர்கொள்ளும் போது மனம் விட்டு அழத் தோன்றும். ஆனால் இந்த வயதில் அழலாமா என்று சிலர் கேட்கும்போதுதான் நம் வயது நியாபகம் வரும். பல சோதனைகள் மற்றும் தவறுகளுடன்  நாம் வளர்ந்தாலும், சில போராட்டங்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அமைந்து விடுகின்றன. இதனால் பேசுவது அவ்வளவு முக்கியமில்லை என்று தோன்றுகிறது. புதுப்படத்தின் டிக்கெட் விற்பனை, பிராண்ட் ஒப்பந்தங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பற்றி வெளிப்படையாக விவாதிக்கும்போது, ஏன் இந்த 5  விஷயங்களை மட்டும் பெரும்பாலான நேரங்களில் பலரும் தவிர்க்கிறார்கள்?
குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் நிராகரிப்பு நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கிறது

வீட்டில் சரியான அன்பும் கவனிப்பும் கிடைக்காதவர்கள் வெளியே அன்பைத் தேடுவார்கள் என்ற மேற்கோளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். குழந்தைகளாக  இருக்கும் போது, பெரும்பாலானவர்களுக்கு எது சரியான அளவு அன்பு அல்லது கவனிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. வளர்ந்த பிறகு இதுகுறித்த தெளிவு கிடைக்கிறது. குழந்தைப் பருவத்தில் நிராகரிக்கப்பட்ட அன்பும் கவனமும் ஆழமான வடுக்களை விட்டுச்செல்லும். இதனால் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, ஒப்புதலுக்கான  மறைக்கப்பட்ட  தேவையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது அதிகப்படியான சாதனைகள் செய்வது, பிறரை மகிழ்வித்தல் அல்லது நாள்பட்ட சுய சந்தேகம் போன்றவை மூலம் வெளிப்படும். இது நிலையான சுய உணர்வு உருவாவதை கடினமாக்கும்.

அன்றாட மன அழுத்தத்தை இயல்பாக்குவதற்கும், உதவி தேடுவதைத் தவிர்ப்பதற்கும், இதை "இயல்பானது" என்று நினைத்து பெரும்பாலானோர் எதிர்கொள்கிறார்கள். ஆழமான பிரச்சனைகள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்போது கூட, மக்கள் தொழில்முறை ஆதரவைத் தேடுவதற்கு யோசிக்கிறார்கள். பணிச்சுமைகள், உறவுச் சிக்கல்கள் அல்லது தொடர்ச்சியான சோகம் ஆகியவை "வயதுவந்தோரின் ஒரு பகுதி" என்று நம்பத் தொடங்குகிறார்கள். இது குணமடைவதை தாமதப்படுத்துவதோடு பெரும்பாலான விஷயங்களை மோசமாக்குகிறது.

ஏன் பெரும்பாலானோர் வளர்ன்ந்த பிறகு கிடைக்கும் நட்பை விட பள்ளி நட்பையே மகிமைப்படுத்துகிறார்கள்? சிலர் இதில் விதிவிலக்குகளாக இருந்தாலும், வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு  புதிய நண்பர்களை உருவாக்குவது பெரும்பாலானவர்களுக்கு கடினமாக உள்ளது. தொழில், குடும்பம் அல்லது தனிப்பட்ட இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, நட்புகள் பெரும்பாலும் மங்கிவிடும். ஒரு பிஸியான தொழிலதிபர், தனது வாழ்க்கை முடிவைப் பற்றி நம்பிக்கையுடன் சொல்லக்கூட யாரும் இல்லையே என்று உணரக்கூடும். இது அவர்கள் எப்போதும் தனியாக இருந்ததால் அல்ல, மாறாக அவர்கள் பழைய நண்பர்களுடனான தொடர்பை இழந்து புதிய பிணைப்புகளை உருவாக்காததால் வருவது.

பெற்றோர்களும் பெரியவர்களும் பெரும்பாலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாலும், ஒவ்வொரு கதையும் யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். தொழில்களை மாற்றுவது, புதிய நகரத்தில் வாழ்க்கையை தொடங்குவது அல்லது நீண்ட கால உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற முடிவுகளுக்கு சிறிய சமூக வழிகாட்டுதல் கிடைக்கின்றன. 30 வயதுகளின் நடுப்பகுதியில் உள்ள ஒருவர் நீண்டகால உறவை முடித்துக்கொண்டு டேட்டிங் செய்வது அல்லது புதிய வழக்கங்களை உருவாக்கும்போது, பல திசைதிருப்பங்களை எதிர் கொள்கிறார். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்.

பலரும் கடன் தொல்லை, நிலையற்ற வருமானம் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஆதரிக்கும் அழுத்தத்துடன் போராடி வருகிறார்கள். ஆனால் வெளியுலகிற்கு வசதியாக  இருப்பது போல் தோன்றுகிறார்கள். பழைய பள்ளி நண்பர்கள் வார இறுதி பயணங்களுக்கு லட்சக்கணக்கில் செலவிடுவது 20 வயதுகளில் உள்ள ஒருவரை நிதி ரீதியாக போதுமானதாக உணர வைக்கலாம். 40 வயதுடைய பொறுப்பான வேலையில் இருக்கும் ஒருவர் மருத்துவ பில்கள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்களில் சிக்கி திணறும் போது, அவசரநிலைகளைப் பற்றி மனதிற்குள் பீதியடைந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் வெளியில், தங்கள் கவலைகளை எல்லோரிடமிருந்தும் மறைக்கிறார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்