Paristamil Navigation Paristamil advert login

1960களுக்கு பின்னர் 1,70,000 பிஸ்ட்ரோக்கள் மூடப்பட்டும் துயரம்!

1960களுக்கு பின்னர் 1,70,000 பிஸ்ட்ரோக்கள் மூடப்பட்டும் துயரம்!

17 ஆவணி 2025 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 3206


இன்று, பிரான்சில் உள்ள கிராமங்களின் மூன்றில் இரண்டிற்கு மேல் Bistrot எனப்படும் அருந்தகங்கள் மற்றும் அன்றாட உண்ணகங்கள் இல்லாத நிலையில் இருக்கின்றன. சிறிய கிராமங்களின் சுறுசுறுப்பிற்கு அவசியமான இந்த நண்பர்களின் சந்திப்பு இடம் பறிபோகின்றது., இது குடியிருப்போருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1960களில், வீட்டுக்கு அருகில் பிஸ்ட்ரோ உள்ளதா? எனும் கேள்வி வினோதமாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் இன்று இது துயரமான கேள்வியாக இருக்கிறது. கிராமத்தின் உயிர் நெறி மற்றும் சமூக பரிமாற்றத்திற்கு முக்கியமான இடமான பிஸ்ட்ரோ இனி இழக்கப்படுகின்றது!.

மேலும் மோசமானது, ஆயிரக்கணக்கான பிரெஞ்சு மக்களிற்கான இந்த இடங்கள் வரைபடத்திலிருந்து நீக்கப்படுகின்றன. 1960களில் இவ்வகை பிஸ்ட்ரோக்கள் 2,00,000 இருந்தன, இன்று வெறும் 30,000 மட்டுமே உள்ளன. அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த கலாச்சாரத்துறை, 2024 ஆம் ஆண்டு «பிரான்ஸின் அருந்தகங்கள்(cafés) மற்றும் பிஸ்ட்ரோக்களின் சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள்» என்பதை பிரான்சின் கலாச்சார பரம்பரை பட்டியலில் (patrimoine culturel immatériel français) சேர்த்துள்ளது.

«இது மிகவும் முக்கியமான இடம். நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பதற்கு கூடவே, இது எல்லா கைவினைஞர்களுக்கும் பரிமாற்ற இடமாகும்», என Yvelines பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

பிஸ்ட்ரோக்களின் அழிவை தடுக்க சட்டம்

«மிகவே துயரமானது, இவை இழக்கப்படுகின்றன. ஆனால் தோல்வியடையாமல் இருக்க வேண்டும். பிஸ்ட்ரோ போன்றவை ஒருபோதும் மீண்டும் காண முடியாதவை. அவற்றை மூடக்கூடாது», என Île-de-France பகுதியைச் சேர்ந்த ஒரு பிஸ்ட்ரோ உரிமையாளர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், பிஸ்ட்ரோக்கள் அழிவடைவதை தடுக்க, புதிய சட்டம் 3,500 மக்கள் குறைந்த கிராமங்களில் பானங்களை விற்பனை செய்யும் இடங்களை (cafés,Bistrot) திறக்க எளிதாக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்