Paristamil Navigation Paristamil advert login

600 கிலோக்கும் அதிகமான கொக்கெய்ன் பறிமுதல் - மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர் விடுதலை!

600 கிலோக்கும் அதிகமான கொக்கெய்ன் பறிமுதல் - மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர் விடுதலை!

17 ஆவணி 2025 ஞாயிறு 12:46 | பார்வைகள் : 1415


நோர்மோந்தியில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் கொக்கெய்ன் பறிமுதல் நடவடிக்கையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஒரு போதைப்பொருள் கடத்துபவர், நடைமுறைக் குற்றப்பிழை காரணமாக ஜூலை மாத இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்.

இரண்டு வருட விசாரணையை பாதிக்கும் வகையில் ஒரு நீதித்துறை பின்னடைவு.

வெறும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்த பிறகு, அல்பேனிய நாட்டைச் சேர்ந்த Orlando G., போதைப்பொருள் கும்பலில் முக்கியப் பாத்திரமாக இருந்ததாகக் கருதப்பட்டவர், செயல்முறை பிழை காரணமாகக் கைது ரத்து செய்யப்பட்டது என்பதால், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 2ஆம் தேதி, கேன் (Caen) காவற்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (Calvados) Ouistreham முகத்தைச சேர்ந்த சேர்ந்தத «Lucky» என்ற மீன்பிடி கப்பலில் (chalutier), , கடலில் சுமார் 600 கிலோ கொக்கெய்னை தென் அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்து எவழங்கப்பட்டதை சேகரிக்கப்பட்டபோது கப்பலுக்குள் நுழைந்த காவற்துறையினர், Orlando G. என்பவரை இரண்டு கடற்படையினருடன் சேர்த்துக் கைது செய்தனர்ர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 40 மில்லியன் யூரோக்களைத் தாண்டுகிறது.

 

பன்னிரண்டு பேர் மீது வழக்கு

இந்தக் கோப்பில் பன்னிரண்டு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் பலர் நோர்மோந்தி கடற்படையினராக இருந்தனர். Orlando G. இந்த நன்கு திட்டமிடப்பட்ட கடத்தல் நடவடிக்கையின் மையக் குறுக்கு இணைப்பாளராக கருதப்பட்டார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட, அவரின் குற்றவியல் தொடர்பைப் பற்றிய ஆதாரங்கள் மிகத் தெளிவாக இருந்தும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

விசாரணை நீதிமன்ற அமர்வின் போது, ஒரு நீதிபதி, chalutier-இன் மறைமுக ஒலிப்பதிவு மூலம் கிடைத்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டார். ஆனால் அவை சட்டப்படி வழக்குக் கோப்பில் முறையாக சேர்க்கப்படவில்லை. இப்போது, அந்த நபர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

நீதித் துறையின் தவறு ஆபத்தானவர்களைக கூடவெளியில் விடும் ஆபத்து நடக்கின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்