புதிய கார்களில் பழுது பிடிக்கும் பிரேக்: மக்கள் அதிர்ச்சி!!

16 ஆவணி 2025 சனி 22:23 | பார்வைகள் : 2250
சமீபத்திய மாதங்களில் விபத்துகளுக்கு காரணமான, வெளிப்படையான காரணமின்றி வாகனங்கள் எதிர்பாராத விதமாக பிரேக் அடிக்கும் (freinages fantômes) சம்பவங்களுக்குப் பிறகு, கார் உற்பத்தியாளர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.
எதிர்பாராத விதமாகவும், வெளிப்படையான காரணமின்றியும் வாகனங்கள் தாங்களாகவே பிரேக் அடிப்பதாக பல அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சகம் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
ஜோயன்னா பெயராஷ் (Joanna Peyrache) உள்ளிட்ட பலர் தங்கள் வாகனம் தானாகவே திடீரென பிரேக் செய்ததில் விபத்துக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர். இவை புதிய வாகனங்களில் உள்ள தானியங்கி சென்சார்களின் உதவி அமைப்புகளால் ஏற்படுகிறது என சந்தேகிக்கின்றனர். அவர் ஒரு மனுவும் தொடங்கியுள்ளார், அதில் பல்வேறு வாகன வகைகள் மற்றும் விபத்துகள் குறித்த 250 புகார்கள் வந்துள்ளன.
வாகன நிபுணர் கிரிஸ்டோப் தோயில் (Christophe Theuil) கூறுவதாவது, இது ஒரு தொழில்நுட்ப வரம்பாக இருக்கலாம். குறிப்பாக சென்சார்கள் சரியாக kalibrage (ADAS ஸ்கேனிங் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது முன்பக்க கண்ணாடியில் உள்ள சென்சார்கள் தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநரால் நிகழ்த்தப்படும் ஆழமான சோதனை) செய்யப்படாமை, அல்லது தவறான சூழ்நிலைகளால் (மழை, பனி, வெளிச்சம்) செயல்பாடுகளில் கோளாறு ஏற்படலாம்.
2022 முதல் ஐரோப்பாவில் அனைத்து புதிய வாகனங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1