போதையில் வாகனத்தைச் செலுத்திய சாரதி,..சிறுவன் பலி!!

16 ஆவணி 2025 சனி 11:49 | பார்வைகள் : 1865
மதுபோதையில் வானத்தைச் செலுத்திய சாரதி ஒருவர் ஆறு வயது சிறுவன் ஒருவனை மோதித்தள்ளியுள்ளார்.
Méru (Oise) நகரில் இச்சம்பவம் ஓகஸ்ட் 13, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. Méru தொடருந்து நிலையம் அருகே நண்பகலில் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் ஐவர் பயணித்துள்ளதாகவும், அதன் சாரதி மது அருந்திவிட்டு வேகமாக மகிழுந்தைச் செலுத்தியதாகவும், கட்டுப்பாடின்றி 6 வயதுச் சிறுவன் ஒருவனை மோதித்தள்ளியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுறது.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.