Paristamil Navigation Paristamil advert login

அரிய நோய் காரணமாக வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் இந்தியர்

அரிய நோய் காரணமாக வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் இந்தியர்

16 ஆவணி 2025 சனி 06:50 | பார்வைகள் : 160


இந்தியர் ஒருவர் தன்னுடைய அரிதான நோய் காரணமாக வருடத்திற்கு 300 நாட்கள் தூங்குகிறார்.

 

ஒரு நபர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் போதுமானது. அதற்கு மேல் தூங்கினால் மந்த நிலைக்கு சென்று விடுவார்கள். ஆனால், இங்கு நபர் ஒருவர் வருடத்திற்கு 300 நாட்கள் தூங்குகிறார்

 

இந்திய மாநிலமான ராஜஸ்தான், பத்வா கிராமத்தில் வசிக்கும் நபர் புர்காராம். இவர் Axis Hypersomnia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இது TNF-ஆல்பா எனப்படும் மூளையின் புரதத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போது ஏற்படும் ஒரு அரிய தூக்கக் கோளாறாகும்.

 

இதன் காரணமாக இவர் மாதத்திற்கு 20 முதல் 25 நாட்கள் தொடர்ந்து தூங்குகிறார்.

 

ஊடக அறிக்கைகளின்படி, 23 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவரது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. குறிப்பாக இவர் தூங்கினால் எழுப்புவது கடினமாகும்.

 

இவர் தூங்கும்போது குளிக்க வைத்தல் மற்றும் உணவளித்தல் உள்ளிட்ட அன்றாட வேலைகளை அவரது குடும்பத்தினர் அவருக்காகச் செய்வதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

 

இவர் கிராமத்தில் வைத்திருக்கும் மளிகை கடையை மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே நடத்துகிறார். இதற்காக இவர் மருத்துவ உதவியை நாடினாலும் அவருக்கான பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மேலும், அவர் அதிக தூக்கம் காரணமாக தலைவலியால் அவதிப்படுகிறார்.

 

 

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்