Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் தீயணைப்புப் படையின் சர்வதேச சேவை!!

பிரான்ஸ் தீயணைப்புப் படையின் சர்வதேச சேவை!!

15 ஆவணி 2025 வெள்ளி 21:12 | பார்வைகள் : 1264


ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கடந்த சில நாட்களாக 70,000 ஹெக்டேர் நிலங்கள் எரிந்துள்ளன. ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து மொத்தமாக 115,000 ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளன. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த தீயை கட்டுப்படுத்த உதவிய பிரான்ஸ் தனது இரண்டு கனடேர் (Canadair) விமானங்களை வியாழக்கிழமை ஸ்பெயினுக்கு அனுப்பியது. விமானங்கள் ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள சாந்தியாகோ டி கம்போஸ்டெல்லா Saint-Jacques-de-Compostelle (Galice) அருகே தரையிறங்கிய அதே நாள் பிற்பகலில் செயலில் ஈடுபட்டன.

இந்த உதவி வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்து, விமானங்கள் நிம்ஸுக்கு (Nîmes-Gard) திரும்புகின்றன. ஏனெனில், சனிக்கிழமையில் பிரான்ஸின் தெற்குப் பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என்பதால், அந்த விமானங்களை உள்ளூர் தீயணைப்பு பணிக்காக தயார்படுத்தபட வேண்டும். 

இத்தாலியில் உள்ள சார்டினியாவில் (Sardaigne) பிரஞ்சு தீயணைப்புப் படையினர் மூன்று வார உதவிக்குப் பின் திரும்புகிறார்கள். மேலும் ஒரு குழு கிரேக்கத்திற்கு சென்றுள்ளது, அங்கே செப்டம்பர் மாதம் வரை உதவி வழங்கவுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்