Paristamil Navigation Paristamil advert login

வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக €95,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக €95,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

15 ஆவணி 2025 வெள்ளி 14:46 | பார்வைகள் : 516


இந்தக் கனதடையுள்ள அபராதம் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு வேகக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. லோசானில் (Lausanne) 50 கிலோமீற்றர் வேக வரம்புள்ள சாலையில், ஒரு பிரஞ்சு நபர் 77 கிமீ வேகத்தில் சென்று பிடிபட்டுள்ளார். 

அவர் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பல கோடி செல்வந்தர் என்பதால், அவருடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு சுவிஸ் நீதிமன்றம் 95,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. சுவிஸ் சட்டப்படி, அபராதத் தொகை குற்றவாளியின் தனிப்பட்ட பொருளாதார நிலையைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நபர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னும் வேகக்குற்றத்தில் பிடிபட்டவராக இருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு 60,000 ப்ராங்க் அபராதமும், 2 ஆண்டு சாசன தடை மற்றும் 10,000 ப்ராங்க் உடனடி அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. 

இப்போது, 40 நாட்களுக்கு 2,000 ப்ராங்க் எனக் கணக்கிட்டு 80,000 ப்ராங்க் அபராதமும், கூடுதலாக 10,000 ப்ராங்க் உடனடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறைகள் சுவிட்சர்லாந்தில் செல்வந்தர்களுக்கு கடுமையான நடவடிக்கையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளனன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்