இலான் ஹலாமி நினைவாக நடப்பட்ட மரம் வெட்டப்பட்டது! - பிரதமர் கண்டனம்!!

15 ஆவணி 2025 வெள்ளி 11:48 | பார்வைகள் : 326
யூத விரோத தாக்குதலுக்கு இலக்காகி பலியான இலான் ஹலாமி (Ilan Halimi) நினைவாக நடப்பட்ட ஓலிவ் மரம் ஒன்று சமூகவிரோத குழுவினால் தறிக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Epinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் நடப்பட்டிருந்த இந்த ஓலிவ் மரம் நேற்று ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை வெட்டப்பட்டிருந்தது.
"எந்த குற்றமும் அவரது நினைவை வேரோடு பிடுங்க முடியாது. யூத விரோத செயல்கள் ஏற்கமுடியாதது,!" என பிரான்சுவா பெய்ரூ தெரிவித்தார்.
மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இலான் ஹலாமி கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.