Paristamil Navigation Paristamil advert login

70 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - இல்-து-பிரான்சிலும் கடும் வெப்பம்!!

70 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - இல்-து-பிரான்சிலும் கடும் வெப்பம்!!

15 ஆவணி 2025 வெள்ளி 08:02 | பார்வைகள் : 435


 

இன்று ஓகஸ்ட் 15, வியாழக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடுமையான வெப்பம் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த வார சனிக்கிழமை ஆரம்பித்த வெப்பம், இந்த வாரம் முழுவதும் தொடர்கிறது.

இல்-து-பிரான்ஸ் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த செம்மஞ்சள் எச்சரிக்கை நீக்கப்பட்டு, ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கைக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என மொத்தம் 70 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 36°C வெப்பமும், ஏனைய பகுதிகளில் அதிகபட்சமாக 41°C வரை வெப்பமும் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்