Paristamil Navigation Paristamil advert login

Poissy : சிறைச்சாலை பிரிகேடியர் அதிகாரி தற்கொலை!

Poissy : சிறைச்சாலை பிரிகேடியர் அதிகாரி தற்கொலை!

15 ஆவணி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1381


 

Yvelines மாவட்டத்தில் உள்ள Poissy மத்திய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஒகஸ்ட் 14, நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிகேடியர் பதவியில் உள்ள 40 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று காலை அவரது சேவை துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதகவலை நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin உறுதிப்படுத்தியதோடு, அவரது மறைவுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உளநல சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. “அனைவருடனும் ஒற்றுமையாகவும், சேவை மனப்பாங்குடனும் பணி புரிபவர்” என அவரது மறைவு அஞ்சலியில் UFAP-UNSA தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்