Paristamil Navigation Paristamil advert login

ஒரே ஒரு மாணவிக்காக ரயில் நிலையம் வைத்திருந்த நாடு

ஒரே ஒரு மாணவிக்காக ரயில் நிலையம் வைத்திருந்த நாடு

14 ஆவணி 2025 வியாழன் 15:37 | பார்வைகள் : 118


ஒரே ஒரு மாணவி பள்ளி செல்வதற்காக ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

பொதுவாக தனியார் நிறுவனங்கள் லாப நோக்கிலும், அரசு நிறுவனங்கள் சேவை நோக்கிலும் செயல்படும் என கூறப்படுவது உண்டு.

சில அத்தியாவசிய சேவைகளில் லாபம் இல்லாவிட்டாலும், தனியார் மயமாக்காமல் அந்த துறைகள் அரசின் கட்டுப்பாட்டிலே இயங்குவது அவசியமாக கருதப்படுகிறது.

அதனை ஜப்பான் அரசு நிரூபித்துள்ளது. மாணவி ஒருவர் பள்ளிக்கூடம் செல்வதற்காக ரயில் நிலையம் ஒன்றை சில ஆண்டுகளாக இயக்கி வந்துள்ளது.

ஜப்பானின் Hokkaido தீவில், Kyu-shirataki என்ற ரயில் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததோடு, சரக்கு சேவையும் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக இந்த ரயில் நிலையத்தை மூட ஜப்பான் ரயில்வே முடிவெடுத்தது.

ஆனால், இந்த ரயில் நிலையம் மூலம் Kana Harada என்ற மாணவி பள்ளிக்கூடம் செல்வது தெரிய வந்ததால், அவருக்காக இந்த ரயில் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த ரயில் நிலையம் மூடப்பட்டால், மாணவி பள்ளி செல்வதற்கு 73 நிமிடங்கள் நடந்து எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க வேண்டும்.

Kyu-shirataki ரயில் நிலையம் செயல்பட்டாலும், ஒரு நாளுக்கு 4 முறை மட்டுமே அதில் ரயில் செல்லும். மாணவி பள்ளி முடிந்து திரும்புவதே கடைசி ரயில் என்பதால், பள்ளி முடிவடைந்த பின்னர் வேறு அவர் எங்கும் செல்ல முடியாது.

மாணவி தனது உயர்நிலை பள்ளிப்படிப்பை மார்ச் 2016 ஆம் ஆண்டில் முடிக்கும் வரை, இந்த ரயில் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்