Val-d'Oise : 800 கிலோ கஞ்சா பறிமுதல்!!
.jpg)
14 ஆவணி 2025 வியாழன் 12:43 | பார்வைகள் : 266
ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை அன்று கிட்டத்தட்ட 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 6.3 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. Magny-en-Vexin (Val-d'Oise) பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த இருவரைக் கைது செய்தனர். அத்தோடு அங்கு பதுக்கி வைத்திருந்த 787 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 66 தொன் கஞ்சா அதிகமாக கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.