Paristamil Navigation Paristamil advert login

டைனோசர் வாழ்ந்த காலம்.., 74 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

டைனோசர் வாழ்ந்த காலம்.., 74 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

14 ஆவணி 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 135


74 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தென் அமெரிக்காவின், சிலி படகோனியாவில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிறிய எலி அளவிலான பாலூட்டியின் புதைபடிவத்தை (fossil) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சாண்டியாகோவிலிருந்து தெற்கே சுமார் 3,000 கிலோமீட்டர் (1,864 மைல்) தொலைவில் உள்ள சிலியின் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.

இது, 30 முதல் 40 கிராம் வரை (சுமார் ஒரு அவுன்ஸ்) எடையை கொண்டுள்ளதாகவும், சுமார் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேல் கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது தென் அமெரிக்காவின் இந்தப் பகுதியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டவற்றில் மிகச் சிறிய பாலூட்டியாகும்.

இந்தப் புதைபடிவம் ஆனது ஒரு சிறிய தாடைத் துண்டுடன் கூடிய ஒரு கடைவாய்ப்பற்களையும், ஒரு சிறிய தாடைப் பகுதியையும் கொண்டுள்ளது என்று சிலி பல்கலைக்கழகம் மற்றும் பாலூட்டிகள் குறித்த சிலியின் மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய ஹான்ஸ் புஷல் கூறியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பானது இந்த மாதம் பிரிட்டிஷ் அறிவியல் இதழான Proceedings of the Royal Society B-யில் வெளியிடப்பட்டது.

இது ஒரு சிறிய கொறித்துண்ணியைப் போலவே இருந்தாலும் பிளாட்டிபஸைப் போல முட்டையிட்டிருக்க வேண்டும், அல்லது கங்காருக்கள் அல்லது ஓபோசம்கள் போன்ற ஒரு பையில் அதன் குஞ்சுகளை சுமந்திருக்க வேண்டும்.

இதனுடைய பற்களின் வடிவத்தை பார்க்கும் போது கடினமான காய்கறிகளை சாப்பிட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

டைனோசர்களைப் போலவே, இந்த சிறிய பாலூட்டி கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவில் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்