Paristamil Navigation Paristamil advert login

28 மாவட்டங்களிற்கு காட்டுத்தீ அபாயம் – செஞ்சிவப்பு எச்சரிக்கை!

28 மாவட்டங்களிற்கு காட்டுத்தீ அபாயம் – செஞ்சிவப்பு எச்சரிக்கை!

14 ஆவணி 2025 வியாழன் 10:06 | பார்வைகள் : 1266


காட்டுத்தீ ஏற்படும் "உயர்" அபாயத்தினால் Météo-France, 28 மாவட்டங்களிற்கு செஞ்சிவப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது.

Charente மாகாணத்தில் 200 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சுட்டெரித்த தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளாலும், மத்திய மற்றும் தென் பிரான்ஸ் பகுதிகள் இன்னும் அதிக அபாயத்தில் உள்ளன.

அபாயத்தில் உள்ள மாவட்டங்கள்:

Nièvre, Indre, Haute-Garonne, Gers, Lot-et-Garonne, Dordogne, Haute-Vienne, Tarn-et-Garonne, Lot, Corrèze, Creuse, Pyrénées-Orientales, Aude, Tarn, Aveyron, Cantal, Puy-de-Dôme, Allier, Hérault, Gard, Ardèche, Haute-Loire, Loire, Rhône, Bouches-du-Rhône, Vaucluse, Drôme, Var.

இதில் Rhône, Ardèche, Drôme, Aude ஆகிய மாகாணங்கள் வெப்ப அலைக்கான மிக உயர்ந்த எச்சரிக்கையிலும் உள்ளன.

வானிலை நிபுணர்கள், கோடை காலத்தின் சாதாரண நிலையை விட இந்த ஆண்டு வறட்சியும் சூடும் அதிகமாக இருப்பதால் தீ பரவல் அபாயம் மிக உயர்ந்துள்ளதாக எச்சரிக்கின்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகள்

பார்பிக்யூ செய்வது என்றால், வீட்டின் வளாகத்திலேயே, புல்வெளி மற்றும் மரங்களிலிருந்து தூரத்தில் செய்ய வேண்டும்.

சிகரெட் மீதிகளை எப்போதும் சாம்பல் தொட்டியில் போட வேண்டும்.

காடுகளில் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த புல் மற்றும் புல்வெளி அருகே வேலை செய்தால், அருகில் தீ அணைப்பு கருவி வைத்திருக்க வேண்டும்.

எரிவாயு, மரக்கட்டைகள் போன்ற எரியும் பொருட்களை வீட்டிலிருந்து தூரத்தில் வைக்க வேண்டும்.

தீ பரவல் ஏற்பட்டால், 112, 18 அல்லது 114 (கேள்வித் தடை உள்ளவர்களுக்கு) என்ற எண்களுக்கு அழைத்து தகவல் அளிக்க வேண்டும்.

வாகனத்துக்குள் தங்காமல், பாதுகாப்பான, துப்புரவு செய்யப்பட்ட வீடுகளில் தஞ்சம் புக வேண்டும், மேலும் காவற்துறையினர் அல்லது நகரபிதா வழங்கும் அறிவுரைகளுக்கு இணங்க நடக்க வேண்டும்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்