இல்-து-பிரான்சுக்குள் வேகக்கட்டுப்பாடு! - பார ஊர்திகளுக்கு தடை!!

14 ஆவணி 2025 வியாழன் 10:06 | பார்வைகள் : 1562
அதிக வெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் அதிக மாசடைவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு, இன்று ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
மணிக்கு 130 கி.மீ வேகம் கொண்ட சாலைகள் 110 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக சராசரியாக 20 கி.மீ வேகத்தினால் அதிகபட்ச வேகம் குறைக்கப்பட்டுள்ளது. 50 இற்கும் குறைவான வேகத்தை கொண்ட சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
அதேவேளை, 3.5 தொன்னுக்கும் அதிகமான எடை கொண்ட வாகனங்கள் சுற்றுவட்ட வீதிக்கு வெளியே பைபாஸ் வழியாக பயணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட இடங்களில் நேரத்தை செலவிடுமாறும், உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம் எனவும் பொது மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.