Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : சட்டவிரோத சீன பொருட்களை பறிமுதல் செய்த சுங்கம்!!

Aulnay-sous-Bois : சட்டவிரோத சீன பொருட்களை பறிமுதல் செய்த சுங்கம்!!

14 ஆவணி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1877


Aulnay-sous-Bois நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றுகுள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சில சட்டவிரோத பொருட்களை சுங்கவரித்துறையினர் மீட்டுள்ளனர்.

ஓகஸட் 6 ஆம் திகதி புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நகைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உடல்நலத்துக்கு தீங்கான, தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய நகைகள் அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், மொத்தமாக 5,600 நகைகளை மீட்டுள்ளன.

நிக்கல், துருப்பிடிக்காத இரும்பு, வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகள் என அவர் உடல்நலத்துக்கு தீங்கானவை என தெரிவிக்கப்படுகிறது. சில உலோகங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்