வெப்பம் : விலக்கப்படுகிறது… 75 மாவட்டங்கள் எச்சரிக்கையில்…!!

14 ஆவணி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 649
வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 75 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
40 தொடக்கம் 43°C வரை நிலவியிருந்த கடுமையான வெப்பம் தற்போது 37 தொடக்கம் 40°C வரை பதிவாக உள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதில் இல்-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.
Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardennes, Ardèche, Ariège, Aube, Aude, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Corse-du-Sud, Drôme, Haute-Corse, Côte-d'Or, Creuse, Dordogne, Doubs, Gard, Haute-Garonne, Gers, Gironde, Hérault, Indre, Isère, Jura, Landes, Loire, Haute-Loire, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Puy-de-Dôme, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Paris, Seine-et-Marne, Yvelines, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Vendée, Haute-Vienne, Vosges, Yonne, Rhône, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சில் அதிகபட்சமாக 34 - 36°C வரை வெப்பம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.