Vinted தளத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு இரை!!

13 ஆவணி 2025 புதன் 21:18 | பார்வைகள் : 2315
Vinted என்ற ஆடை மறுசுழற்சி விற்பனை தளத்தில், பல பெண் பயனர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அடிக்கடி உள்ளாகின்றனர். அவர்கள் பதிவிடும் ஆடைகளின் புகைப்படங்களை பார்த்து, சிலர் கீழ்த்தரமான கருத்துகள், நக்கல்கள் மற்றும் ஒழுங்கற்ற கோரிக்கைகளை தெரிவிக்கிறார்கள்.
Marie மற்றும் Jade போன்ற பெண்கள் இந்த அனுபவங்களை பகிர்ந்து, Vinted-இல் 'பிரிடேடர்கள்' இருப்பதை எச்சரித்துள்ளனர். "உன் டிரெஸ்ஸிங் எனக்கு சூடா இருந்தது", "உன் கால்கள் படத்தை அனுப்புவியா?" போன்ற அவமானகரமான செய்திகளை அவர்கள் பெற்றுள்ளனர்.
பல பெண்கள் தங்களை பாதுகாக்க, முகம் மற்றும் உடலின் பகுதிகளை மறைத்து புகைப்படங்கள் இடுகின்றனர். Vinted தளம் சில புகார்களுக்கு விரைவில் பதிலளித்து, கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
பயனர்கள் பதிவு செய்யும் போது அடையாள அட்டை கோரப்பட வேண்டும் என்றும், தளம் மேலும் பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.