யுக்ரேன் ஜனாதிபதி - ஐரோப்பிய தலைவர்கள் சந்திப்பு!!

13 ஆவணி 2025 புதன் 15:34 | பார்வைகள் : 454
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புட்டின் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் இடம்பெற்ற உள்ளது. இந்நிலையில், யுக்ரேனிய ஜனாதிபதி ஐரோப்பிய தலைவர்களை இன்று வீடியோ அழைப்பின் மூலம் சந்திக்கிறார்.
மூன்று கட்டமாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.
யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கி சற்று முன்னர் ஜேர்மனி தலைநகர் பெர்லினை வந்தடைந்தார். அங்கிருந்துகொண்டு அவர் காணொளி அழைப்பில் ஈடுபட உள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இம்மானுவல் மக்ரோன் Fort Brégançon தீவில் விடுமுறையில் உள்ளார். அங்கிருந்துகொண்டு அவர் அழைப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
யுக்ரேனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் முழுமையாக வெளியேற வேண்டும் எனும் கோரிக்கையை யுக்ரேன் முன்வைப்பதாக அறிய முடிகிறது.