Paristamil Navigation Paristamil advert login

மில்லியன் கணக்கில் 1000 ஊழியர்களுக்கு போனஸ்! AI ஜூக்கர்பெர்கினால் வாரி வழங்கும் OpenAI

மில்லியன் கணக்கில் 1000 ஊழியர்களுக்கு போனஸ்! AI ஜூக்கர்பெர்கினால் வாரி வழங்கும் OpenAI

13 ஆவணி 2025 புதன் 07:22 | பார்வைகள் : 795


பிரபல OpenAI நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் போனஸை அறிவித்துள்ளது.

AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினால் டெக் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி அதிகரித்துள்ளது.

உயரடுக்கு AI ஆராய்ச்சியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் உலகளவில் இது திறமைக்கான போராக மாறியுள்ளது.

OpenAI போன்ற நிறுவனங்கள் கணினி மற்றும் உள்கட்டமைப்பில் பில்லியன்களை முதலீடு செய்வதால், பரந்த பொருளாதார மதிப்பில் இருந்து AI ஆராய்ச்சியாளர்களின் தேவை உருவாகிறது என தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் (Sam Altman) குறிப்பிட்டார்.

மேலும், சில நிறுவனங்களின் அணுகுமுறையை விமர்சித்த அவர், ஒரு சில பளபளப்பான பெயர்களை மட்டுமே அவர்கள் துரத்துகிறார்கள் என்று கூறினார்.

சமீபத்திய வாரங்களில் மெட்டா நிறுவனம் துரிதகதியில் பணியமர்த்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, OpenAIயில் இருந்து திறமையாளர்களை இழுப்பதாக கூறப்படுகிறது.

மெட்டா CEO மார்க் ஜூக்கர்பர்க் Super intelligence Labsயின் பின்னால் குழுவை தீவிரமாக உருவாக்கி வருகிறார். மேலும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் டொலர்கள் போனஸ் மற்றும் 300 மில்லியன் டொலர்கள் வரை ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியை சமாளித்து ஊழியர்களை தக்கவைக்க, OpenAI நிறுவனம் தங்கள் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களுக்கு போனஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த போனஸ் ஊதியமானது, குறைந்த லட்சக்கணக்கில் இருந்து பல மில்லியன் டொலர்கள் வரையிலானதாக இருக்கும் என்றும், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பதவிகளில் உள்ள ஊழியர்களை இலக்காகக் கொண்டதாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஊழியர்களின் செயல்திறன், அனுபவம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் அவர்களின் பிரிவுகள் தீர்மானிக்கப்படும்.

ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளில் காலாண்டுக்கு பங்கு விருதுகள் வழங்கப்படுவதால், ரொக்கமாகவோ அல்லது Equity ஆகவோ பணம் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்