அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா தரமான பதிலடி

13 ஆவணி 2025 புதன் 07:22 | பார்வைகள் : 113
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டார்வினில் நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) 125 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் 218 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, டிம் டேவிட் சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவமாடினார்.
அதிரடியில் மிரட்டிய டிம் டேவிட் (Tim David) 24 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மாபாகா (Maphaka) மற்றும் போஷ் (Bosch) ஆகிய இருவரின் மிரட்டலான பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலியா 165 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முடிவுகட்டியது.
மாபாகா, போஷ் தலா 3 விக்கெட்டுகளும், ரபாடா, மார்க்ரம், இங்கிடி மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.