ஆகஸ்ட் 16 சனிக்கிழமை 90% மருந்தகங்கள் மூடப்படவுள்ளது!!

12 ஆவணி 2025 செவ்வாய் 22:04 | பார்வைகள் : 595
செப்டம்பர் 1 முதல், மருந்து நிறுவனங்கள் மருந்தகங்களுக்கு வழங்கும் ஜெனெரிக் (génériques) மருந்துகளுக்கான(ஜெனெரிக் மருந்து என்பது ஏற்கனவே சந்தையில் உள்ள ஒரு மருந்தின் மூலக்கூறிலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு மருந்தாகும்)
தள்ளுபடிகள் 20%-25% என்ற வரம்பில் கட்டுப்படுத்தப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 16 சனிக்கிழமை, சில பிராந்தியங்களில் சுமார் 90% மருந்தகங்கள் மூடப்பட உள்ளன. இது வேலைநிறுத்தம் அல்ல; எதிர்காலத் தவிர்க்க முடியாத மூடல்கள் மற்றும் பணிநீக்கங்களை சிந்திக்க ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கிறது.
இந்த முடிவால், இப்போது 40% வரை கிடைக்கும் தள்ளுபடிகள் குறையக்கூடியதால், சுமார் 6,000 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
FSPF மற்றும் Uspo உள்ளிட்ட மருந்தக சங்கங்கள், செப்டம்பரில் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன, மேலும் போராட்டங்கள் கல்வியாண்டு தொடங்கும் போது தீவிரமடையும் என அறிவித்துள்ளன.