Paristamil Navigation Paristamil advert login

காசாவில் யுத்தத்தின் முகமாக மில்லியன்கணக்கானவர்களிற்கு அனஸ் அல் ஷரீவ் மாறினார்...

காசாவில் யுத்தத்தின் முகமாக மில்லியன்கணக்கானவர்களிற்கு அனஸ் அல் ஷரீவ் மாறினார்...

12 ஆவணி 2025 செவ்வாய் 20:15 | பார்வைகள் : 332


காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தவேளை அனாஸ் அல் ஷரீவ் தொலைக்காட்சியில் தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்ற தொடங்கினார்.

 

மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மக்கள் ஆராவரித்தனர். அன்றைய நாளுடன் காசா பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மில்லியன் மக்களின் துயரங்கள் முடிவிற்கு வந்துவிடும் என நம்பினார்கள்.

 

இதற்கு ஏழு மாதங்களிற்கு பின்னர் காசா நகரத்தில் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றின் மூலம் இஸ்ரேல் அல்ஜசீரா ஊடகவியலாளரையும் அவரது சகாக்கள் நால்வரையும் கொலை செய்தது.

 

காசாவில் அதிகம் அறியப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர்இயுத்தத்தின் போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல பத்திரிகையாளர்களில் ஒருவர்.- அல் ஷரீவின் மரணம் சர்வதேச கண்டனங்களை மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன் பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன.

 

 

இஸ்ரேல் காசாவிற்குள் சர்வதேச ஊடகங்கள் செல்வதற்கு தடைவிதித்திருந்த சூழ்நிலையில் மில்லியன் கணக்காண மக்களிற்கு காசாவின் கதையை தெரிவித்ததன் மூலம் 28 வயது அல் ஷரீவ் பிரபலமானவராக மாறினார்.

 

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிகம் அறியப்படதவராக காணப்பட்ட இவர் காசா குறித்த அந்த மக்களின் துயரங்கள் குறித்த நாளாந்த செய்திஅறிக்கையிடல் காரணமாக அராபிய உலகின் வீடுகளில் பேசப்படும் ஒரு பெயராக மாறினார்.

 

மோதலின் மிக முக்கியமான தருணங்களின் நேரடி தகவல்களை அவரது செய்திகள் வழங்கின.காசாவின் குறுகிய காலம் நீடித்த யுத்த நிறுத்தம் குறித்தும்இஇஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலை குறித்தும்இஉலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பட்டினி குறித்தும் அவர் செய்திகளை வெளியிட்டார்.

 

 

2023 இல் தனது சொந்த நகரமான ஜபாலியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த அவரது வீடியோ வைரலானதை தொடர்ந்து அல்ஜசீரா ஷெரீவை இணைத்துக்கொண்டது.அவ்வேளை புகைப்படப்பிடிப்பாளராக விளங்கிய இவர் ஆரம்பத்தில் தயங்கினாலும்இசகாக்களின் வற்புறுத்தல்களால் போர் முன்னரங்கில் தனது முகத்தை காண்பித்தார்.அவர் விபரிக்க முடியாதது என வர்ணித்த அனுபவம் அது.

 

'நான் உள்ளுர்சனல்களில் கூட தோன்றியதில்லை"இஎன கடந்த பெப்ரவரியில் இவர் சொடுர் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். 'தற்போது உயிருடன் இல்லாத எனது தந்தையே இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்" என அவர் தெரிவித்திருந்தார்.

 

அல்ஷரீவ் தொலைக்காட்சியில் தோன்ற ஆரம்பித்த சில காலத்தின் பின்னர் ஜபாலியாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சில் தந்தை கொல்லப்பட்டார்.

 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஷரீவ் அல்ஜசீராவிற்காக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் 24 மணித்தியாலத்தில் இரண்டு தடவையாவது தொலைக்காட்சியில் தோன்றினார்.

 

'ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மருத்துவமனைகளில் உறங்கினோம்இவீதிகளில் இ வாகனங்களில்இஅம்புலன்ஸ்கள்இ முகாம்களில்இஇடம்பெயர்ந்த மக்களுடன் உறங்கினோம்இநான் 30 அல்லது 40 இடங்களில் உறங்கியிருப்பேன்' என அவர் தெரிவித்திருந்தார்.

 

 

கடந்த ஜனவரியில் அவர் தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்றியவேளை மக்கள் அவரை தங்கள் முதுகில் சுமந்துசென்றனர்

 

"என்னை சோர்வடையச் செய்த தலைக்கவசத்தையும்இ என் உடலின் நீட்சியாக மாறிய இந்தக் கவசத்தையும் நான் கழற்றுகிறேன்இ" என்று அவர் அப்போது அல் ஜசீராவில் நேரலையில் கூறினார்இ காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சக ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

 

அல்-ஷெரீப்பின் அறிக்கைகள் இஸ்ரேலிய இராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது மேலும் அவர் கூறுகையில் அல் ஜசீராவிற்கான தனது பணியை நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

 

இந்த வலையமைப்பு ஏற்கனவே காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளால் பல ஊழியர்களை இழந்த ஒரு வலையமைப்பாகும்இ இதில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இஸ்மாயில் அல் கோல் மற்றும் மார்ச் மாதத்தில் கொல்லப்பட்ட ஹோசம் ஷபாத் ஆகியோர் அடங்குவர்.

 

இறுதியில்(இஸ்ரேலிய இராணுவம்) எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு குரல் குறிப்புகளை அனுப்பியது... ஒரு உளவுத்துறை அதிகாரி என்னிடம்... 'நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறி தெற்கே சென்று அல் ஜசீராவிற்கு செய்தி அனுப்புவதை நிறுத்த சில நிமிடங்கள் உள்ளன' என்று கூறினார்... நான் ஒரு மருத்துவமனையில் இருந்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தேன்."

 

சில நிமிடங்கள் கழித்துஇருந்த அறை தாக்கப்பட்டது அறை தாக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.

 

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை.

 

இப்போது ஏன்?

 

10 மாதங்களுக்கு முன்பு அல்-ஷெரீஃப் ஹமாஸுடன் தொடர்புடையவர் என்று இஸ்ரேல் முதலில் குற்றம் சாட்டியது. இப்போது அவரை குறிவைக்க முடிவு செய்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

நன்றி virakesari

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்