பக்டீரியா சந்தேகத்தால் 40க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன!!

12 ஆவணி 2025 செவ்வாய் 17:59 | பார்வைகள் : 606
பிரான்சில் லிஸ்டீரியா பக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள், camemberts, chèvres, gorgonzolas, bries போன்றவை, முக்கிய வணிக மையங்களிலிருந்து மீளபெறப்பட்டுள்ளன.
இந்த சீஸ்வகைகள் பெரும்பாலும் Fromagerie Chaverand என்ற நிறுவனத்திலிருந்து வந்தவையாகும். இந்த பக்டீரியா கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலருக்கு ஆபத்தானது. உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகவே நடந்துள்ளன என்று நுகர்வோர் உரிமை அமைப்பான Foodwatch கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இதே நிறுவன சீஸ்வகைகள் மீட்பு அறிவிப்பு வெளியானபோதும், சரியான சோதனைகள் மற்றும் தடுப்புச்செயல்கள் எடுக்கப்படவில்லை என அமைப்பு குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.