வெப்பத்தை தொடர்ந்து - இடி மின்னல் தாக்குதல்!

12 ஆவணி 2025 செவ்வாய் 17:04 | பார்வைகள் : 344
இன்று பகல் முழுவதும் நிலவிய கடுமையான வெப்பத்தை அடுத்து, இரவு இடி மின்னல் தாக்குதல்களும், மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் தெற்கு பகுதிகளில் 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் நள்ளிரவு வரை இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் Météo-France எச்சரிக்கிறது.
Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Aveyron, Cantal, Gard, Hérault, Isère, Landes, Haute-Loire, Lozère, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Savoie, Tarn ஆகிய மாவட்டங்களோடு தீவு மாவட்டங்களான Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகியவற்றும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று மிக கடுமையான வெப்பம் பகல் முழுவதும் நிலவியிருந்தது. இன்று பதிவான அதிகூடிய வெப்பம் தொடர்பான செய்திகள் சிறிது நேரத்தில் வெளியாகும்.