Paristamil Navigation Paristamil advert login

"கூலி" படத்தில் கலாநிதி மாறன் நடிக்கிறாரா?

12 ஆவணி 2025 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 182


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக முன்னர் பரவிய வதந்தி தவறானது என ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கலாநிதி மாறன், ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது.

இந்த வதந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படக்குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, இதுவும் ஒரு வதந்திதான் என்று கூறப்படுகிறது.

"கூலி" படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக இதுபோன்ற வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றனவா அல்லது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் உருவாக்குகிறார்களா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் சிறப்பு தோற்றங்கள் குறித்த உண்மையான தகவல்கள் பட வெளியீட்டின்போது மட்டுமே தெரிய வரும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்