பிரபாஸுக்கு திருமணம் மணமகள் யார் தெரியுமா?

12 ஆவணி 2025 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 201
நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இந்திய சினிமாவில் பாகுபலி படங்களின் மூலமாக ஏராளமான ரசிகர்களைப் பெற்றவராக நடிகர் பிரபாஸ் உள்ளார். 45 வயதாகும் நடிகர் பிரபாஸுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அவருக்கு திருமணம் முடித்து வைப்பதற்கு குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாஸும் நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தீயாய் பரவியது. அனுஷ்காவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் இருவருக்கும் இடையே திருமணம் ஏற்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதன் பின்னர் நடிகை கீர்த்தி சனனுடன் இணைந்து பிரபாஸ் பேசப்பட்டார். இந்த நிலையில் பிரபாஸின் உறவினரான சியாமளா செய்தியாளர்கள் எழுப்பிய பிரபாஸின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அவர் என்றைக்கு சிவனின் ஆசிர்வாதங்கள் கிடைக்கிறதோ அப்போது பிரபாஸின் திருமணம் நடைபெறும். அவருடைய திருமணத்திற்காக நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
வெகு விரைவில் சிவனின் அருளால் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார். வெகு விரைவில் என அவர் குறிப்பிட்டு இருப்பது தற்போது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸ் அடுத்ததாக தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து ஸ்பிரிட், சலார் இரண்டாம் பாகம் மற்றும் கல்கி படத்தின் இரண்டாம் பாகங்களில் பிரபாஸ் நடிக்க வருகிறார்.